/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94_20.jpg)
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்துஇயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இவர்கள்கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'பூலோகம்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கு அகிலன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் தலைப்பின் கீழ் இந்தியப் பெருங்கடலின் அரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்நடிகர் ஜெயம் ரவி கப்பலில்பணியாற்றும்உடையில் தோன்றியுள்ள இந்த போஸ்டர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)